Uncle's micro story

மைக்ரோ கதை
தலைப்பு  நடப்பவை நல்லதற்கே

  தன் நெடு நாள் நண்பன் சோமுவைப் பார்க்க அவனது 
  இல்லம் சென்றிருந்தான் ராமு.
  
  வெகு விரைவில் செல்வம் ஈட்டுலாம் என நினைத்து தான் 
  வாங்கி இருந்த தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று 
  காண்பித்தான் சோமு.
  
  அங்கு கவலையுடன், "காய்கள் பெரிதாக வருவதே இல்லை ,
  தோப்பில் பணம் போட்டு நன்றாக மாட்டிக் கொண்டேன்"   புலம்பினான்.  
  
  அப்பொழுது சட்டென அவன் மண்டையில் சிறிய  
  தேங்காய்   ஒன்று விழுந்தது. "ஆ" என அலறினான்.
  
 "காய்கள் பெரிதாக இல்லை அதனால் நல்ல வேளை 
 தப்பித்துக் கொண்டாய்" என்றான் ராமு.

Comments

Popular posts from this blog

My own plot of flash season 5

Cooking Diary Episode 1