My uncle's poem about his grandmother
நீலவானில் நிலவைக்
காட்டி
பாட்டி ஊட்டிய சோறு
கோலமயிலும்
நாணுமாறு அவள்
எனக்கு உடுத்திய பட்டாடை
மாலைவெயிலில்
என்மழலைக் கரம்பற்றி
நாம்சென்ற பாதை, எல்லாம்
நிலாக்கால நினைவுகள்
அவளில்லாமல்
இன்று கனாக்கால கனவுகளாய்
Comments
Post a Comment