Posts

Showing posts from July, 2018

Uncle's micro story

மைக்ரோ கதை தலைப்பு  நடப்பவை நல்லதற்கே   தன் நெடு நாள் நண்பன் சோமுவைப் பார்க்க அவனது    இல்லம் சென்றிருந்தான் ராமு.      வெகு விரைவில் செல்வம் ஈட்டுலாம் என நினைத்து தான்    வாங்கி இருந்த தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று    காண்பித்தான் சோமு.      அங்கு கவலையுடன், "காய்கள் பெரிதாக வருவதே இல்லை ,   தோப்பில் பணம் போட்டு நன்றாக மாட்டிக் கொண்டேன்"   புலம்பினான்.        அப்பொழுது சட்டென அவன் மண்டையில் சிறிய     தேங்காய்   ஒன்று விழுந்தது. "ஆ" என அலறினான்.     "காய்கள் பெரிதாக இல்லை அதனால் நல்ல வேளை   தப்பித்துக் கொண்டாய்" என்றான் ராமு.

My uncle's poem

இது நீண்ட நெடிய பயணம் - மகளே நீ சாதித்து காட்ட வேண்டிய தருணம் காலம் ஏனோ கனியவில்லை கயவர்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை - ஆகையால் கதிரவன் கரையுமுன் கடந்து விடு உன் இலக்கை அடைந்து விடு கவலை வேண்டாம் காலம் மாறும் - பாரதி கண்ட கனவும் உன்னால் நிறைவேறும்